ஏ.ஜி.ஏ.கபூர், அக்கரைப்பற்று-
முரண்பாடுகளின்றிய நிரந்தர சமாதானத்திற்கான அறை கூவல்என்ற தொனிப் பொருளில் ; புகைப்படக் கண்காட்சி ஒன்று இன்று (17.03.2014) திங்கட்கிழமை அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில்நடைபெற்றது.
சமாதானமும் சகவாழ்வுக்குமான அமைப்பினால் நடாத்தப்பட்ட இப் புகைப்படக் கண்காட்சி பிரஜைகள் குழுவின் தலைவர் எம்.ஜே.முஹம்மட் அன்வர் தலைமையில் நடைபெற்ற இப் புகைப்படக் கண்காட்சியில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டு, மங்கள விளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி அவர்களும்.மாநகர ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி, பல்கலைக்கழக பதிவாளர்மற்றும் விரிவுரையாளர் எம்.ஏ.சமீம் பௌத்த,ஹிந்து இஸ்லாம்,கிறிஸ்தவ மதத் தலைவர்களும் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இப் புகைப்படக் கண்காட்சி யில் பயங்கரவாத காலம் தொடக்கம் இன்றைய மஹிந்த சிந்தனை அபிவிருத்தி காலம் வரையான நிகழ்வுகள் அடங்கிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இப் புகைப்படக் கண்காட்சி யில் பயங்கரவாத காலம் தொடக்கம் இன்றைய மஹிந்த சிந்தனை அபிவிருத்தி காலம் வரையான நிகழ்வுகள் அடங்கிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
பிரதம அதிதி உட்பட கலந்து கொண்;;ட அதிதியாக கலந்து கொண்டவர்கள்; புகைப்படக் கண்காட்சியினைப் பார்வையிடுவதையும்,; கண்காட்சியினைப் பார்வையிட வந்த பாடசாலை மாணவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
இன்று இரவு 9.00மணிவரை நடைபெறவுள்ள இக் கண்காட்சியில் மாணவர்களுக்கென விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




.jpg)
.jpg)
0 comments :
Post a Comment