நிலவில் பயன்படுத்திய கேமரா சுமார் 8 லட்சத்து 35 ஆயிரம் டொலருக்கு ஏலம்

நிலவில் பயன்படுத்திய சிறப்புமிக்க கேமரா சுமார் 8 லட்சத்து 35 ஆயிரம் டொலருக்கு ஏலம் போனது.

1969-ம் ஆண்டு முதல் 1972-ம் ஆண்டு வரை நிலவு ஆராய்ச்சிக்காக நாசா அனுப்பிய அப்போலோ விண்வெளி திட்டங்களில் 14 கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. அதில் அப்போலோ-15 ஓடத்தில் அனுப்பிய கேமரா மட்டுமே பூமிக்கு திரும்ப கொண்டு வரப்பட்டது. நிலவின் பாறைத் துகள்களை ஏற்றி வருவதற்காக, அதிக எடை கொண்ட இத்தகைய கேமராக்களை நிலவிலேயே விட்டு விட்டு வந்துள்ளனர்.

அப்போலோ-15 திட்டத்தின்போது அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் இர்வின் பயன்படுத்திய இந்த ‘ஹாசல்பிளாட்-500’ ரக கேமரா வியன்னாவில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இதன் அடிப்படை விலையாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் யூரோ நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஏலத்தின் முடிவில், ஜப்பான் தொழிலதிபர் டெருகாஜு புஜிசவா, கேமராவை 8 லட்சத்து 35 ஆயிரம் டாலருக்கு வாங்கினார்.

விஞ்ஞானி இர்வின் நிலவில் எடுத்த புகைப்படங்களில் காணப்படும் ‘38’ என்ற எண், இந்த கேமராவில் உள்ள ஒரு சிறிய தகட்டில் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :