சிராஸின் வெளியேற்றத்துடன் ஜெமீல் தலைமையில் ஒற்றுமைப்பட்டது SLMC சாய்ந்தமருது மத்திய குழு!







அஸ்லம் எஸ்.மௌலானா-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழுக் கூட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பின்னர் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் மு.கா.குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ் இக்கூட்டத்தை கூட்டியிருந்தார்.

சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், ஏ.எம்.நிசார்தீன் உட்பட கட்சியின் ஆரம்பகால முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சிராஸின் வருகையினால் இப்பிரதேசத்தில் கட்சிக்குள் உட்பூசல் நிலவியதாகவும் பல அணிகள் செயற்பட்டதாகவும் அதனால கடந்த இரு வருடங்களாக மத்திய குழுக் கூட்டத்தை நடத்த முடியவில்லை என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவர் தற்போது கட்சியில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து மாநகர சபை உறுப்பினர்களும் கட்சிப் பிரமுகர்களும் ஒரே அணியாக இணைந்து செயற்பட முன்வந்துள்ளனர் என்றும் அதன் பயனாகவே மத்திய குழுக் கூட்டத்தை நீண்ட காலத்திற்குப் பின்னர் கூட்ட முடிந்திருப்பதாகவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இத்தகைய ஒரு கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் வகையில் கட்சிக்குள் எவரும் ஊடுருவ இனிமேலாவது இடமளிக்கக் கூடாது என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதுடன் சில தீர்மானங்களும் நிறைவற்றப்பட்டன.

* இப்பிரதேசத்தைச் சேர்ந்த யாரையாவது கட்சியில் புதிதாக இணைக்கும் போதும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கும் போதும் பதவிகள் வழங்கப்படும் போதும் கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழுவின் ஆலோசனைகளையும் அனுமதியையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

* சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபையை உருவாக்கும் நடவடிக்கையை முஸ்லிம் காங்கிரஸ் துரிதப்படுத்த வேண்டும்.

* கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது வலய அலுவலகத்தை திறப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழுவை மாதாந்தம் கூட்டி கட்சி நடவடிக்கைகள் மற்றும் ஊரின் அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட வேண்டும்.

போன்ற தீர்ர்மானங்கள் இக்கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

சிராஸ் மீராசாஹிபுக்கு மேயர் பதவி வழங்கும் போதும் முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.நிஜாமுதீன் உள்ளீட்ட சிலர் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படும் போதும் கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழுவின் ஆலோசனைகள் பெறப்படவில்லை என்று இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டு கவலையும் விசனமும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறானோரே கட்சிக்கு துரோகமிழைத்து- கட்சியை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்றும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அதேவேளை கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது வலய அலுவலகத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை தான் மாநகர முதல்வருடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாகவும் விரைவில் அது வர்த்தமானிப் பிரகடனம் செய்யப்பட்டு- சட்டபூர்வமாக செயற்பட ஆரம்பிக்கும் என்றும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :