அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கழிவுநீர் தொட்டியில் 7 வயது சிறுவன்



மைலாப்பூரில் கழிவுநீர் தொட்டியில் 7 வயது சிறுவன் மர்மமான முறையில் பிணமாக கிடந்தான். அவன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் மாயம்

சென்னை மைலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அப்புராஜ் (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கலா (30). இவர்களின் மகன் பரத் (வயது 7). இவன் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலையில் நண்பர்களோடு விளையாட சென்ற பரத் இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் பயந்துபோன சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் பரத் கிடைக்காததையடுத்து, மைலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பிணமாக மீட்பு

இந்தநிலையில் நேற்று காலையில் அதே பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டி ஒன்றில் பரத் ரத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டான். தண்ணீர் குறைவாக உள்ள தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பரத் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மர்ம நபர்கள் யாரேனும் அடித்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மைலாப்பூர் போலீசார் நேற்று அதே பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் சிலரிடமும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

அடித்து கொலை?

இதுகுறித்து பரத்தின் மாமா பிரகாஷ் கூறியதாவது:-

நொச்சிக்குப்பம் மீனவர் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் பரத் கழுத்து, உதடு உள்ளிட்ட பகுதிகளில் ரத்த காயங்களுடன் போர்வை ஒன்றில் பொதிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டான். ஆகையால் யாரேனும் அவனை கொலை செய்து வீசியுள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.

பரத் பிணமாக மீட்கப்பட்ட பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகமானோர் சுற்றித்திரிவார்கள். இவர்கள் கடைக்கு செல்லவேண்டும் என்று அழைத்திருக்கவேண்டும், சிறுவன் செல்லமாட்டேன் என்று கூறியதால் அவர்கள் அடித்து கொலை செய்திருக்கலாம். ஆகவே இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :