பொதுபலசேன செயலாளர் ஞானதேரர் அண்மைக்காலமாக வில்பத்து காட்டில் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் 5000 முஸ்லீம் குடும்பங்களை காடுகளை வெட்டி குடியேற்றுவதகாவும் அவர் அறபு நாடுகள் அரேபியா கொலணி திட்டமொன்றை அங்கு உறுவாக்குவதாகவும் அண்மைக்காலமாக ஊடகங்களில் சொல்லிவந்திருந்தார்.
அதற்காக அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தனது சட்டதரணி ஊடாக 500 மில்லியன் ருபா நஸ்ட ஈடு கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். ஞானதேரர் சொன்ன படி அவ்வாறாக வில்பத்துவில் ஏதும் நடைபெற்றுள்ளதாக என அவர் நிருபீக்க வேண்டும்.
அவருக்கு 14 நாட்கள் அவசாகம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் சொன்னதை பிழை என்று பகிரங்கமாக மண்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு எதிராக மான நஸ்ட ஈடு கோரப்பட உள்ளதாக இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அமைசச்ர் றிசாத் பதியுத்தீன் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.
இந்தத் தேரர் கடந்த ஒன்றரை வருட காலமாக குறிப்பாக முஸ்லீம்களை தாக்கி வருகின்றார். முதலில் ஹாலால் என்று ஜம்மியத்துல் உலாமாவைத் தாக்கினர். முஸ்லீம் பெண்கள் அணியும் உடைமீது அவதூரு தெரிவித்தார். அதன் பின்னர் பள்ளிவாசல் மத்ரசாக்கள் மீது பயங்கரவாதம் ஆயுதம் இருப்பதாக தெரிவித்தார்.
மறைந்த அஸ்ரப் 2 கொல்களனில் ஆயுதம் கொண்டுவந்து கொடுத்திருந்தாக தெரிவித்தார். இவர் ஒவ்வொரு முறையும் புதிய புதிய கதைகளைச் சொல்லி வருகின்றார். அவை ஒன்றும் இந்த நாட்டில் உள்ள மக்கள் மத்தியில் எடுபடுவதில்லை. தற்பொழுது முஸ்லீம் அரசியல் வாதிகளை தாக்க முனைகின்றார். இவருக்கும் பிண்னால் இருக்கும் சக்திகள் எவை? என்பதை நாம் அறியவேண்டும்.
ஊடகவியலாளர்கள் கேள்;வி - ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளர் அமைச்சரவையில் பொதுபலசேனா முஸ்லீம்;களுக்கு எதிராக கக்கும் ;துவேசத்தை நீங்கள் சொல்லி இவர்களை கட்டுப்படுத்தமுடியவில்லையா ? எனக் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் நாங்கள் சொல்கின்ற சகலருக்கும் சொல்லியும் பயணில்லை அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுபடவில்லை. ஆகவேதான் இந்த ஊடக மாநாட்டைக் கூட்டி ஞானதேரருக்கு நீதிமன்றம் ஊடாகவது தண்டணையோ அல்லது எச்சரிக்கை செய்வதற்கு நாங்கள் முயல்கின்றோம் என தெரவித்தார்.

.jpg)
0 comments :
Post a Comment