சவூதி அரேபிய நீதிமன்றத்தினால், இலங்கை பெண்ணுக்கு 1200 கசையடிகள்



வுதி அரேபிய நீதிமன்றத்தினால் 1200 கசையடிகள் விதிக்கப்பட்டுள்ள தனது மனைவியை விடுதலை செய்துதருமாறு அதிகாரிகளிடம் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கசையடிக்கு மேலதிகமாக 12 வருடகால சிறைத்தண்டனையும் அந்த பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ளதாக அவரின் கணவரான சந்ரசிறி வீரசேகர என்பவருக்கு குறிப்பிட்டுள்ளார்.

நிக்கவெரட்டிய, விட்டிகுழிய, வதுவெஸ்ஸ பகுதியை சேர்ந்த இலங்கைப் பெண் ஒருவருக்கே சவுதியில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் ஜித்தாவிலுள்ள மலாஸ் சிறைச்சாலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த பெண் 2006 ஆம் ஆண்டு மே மாதம் வீட்டுப் பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவிற்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளார்.

பணியாற்றிய வீட்டில் திருடிய குற்றச்சாட்டின் பேரில் சில வருடங்களுக்கு முன்னர் இந்த பெண், சவுதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்கின்றவர்களுக்கு அந்தந்த நாடுகளின் சட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்ட பின்னரே அனுப்பிவைக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொதுமுகாமையாளர் மங்கல ரந்தெனிய குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :