.jpg)
.jpg)
பி.எம்.எம்.ஏ.காதர்-
கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட்.ஏ.எச் றஹ்மான் எடுத்த துரித முயற்சியின் பயனாக மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி பெண்கள் பிரிவுக்கான நிருவாகக் கட்டடத்தின் முதல் கட்ட வேலைகள் பூர்த்தியடைந்துள்ளது.
பிரதி அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர விடம் கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட்.ஏ.எச் றஹ்மான் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதல் கட்ட வேலைக்காக இருபது இலட்சம் ரூபாவை அவர் ஒதுக்கியிருந்தார்.
முதல் கட்டமாக பூர்த்தியடைந்த கட்டத்தை உறுப்பினர் இஸட்.ஏ.எச் றஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அண்மையில் திறந்து
வைத்தார். ஆதிபர் எம்.எம்.ஹிர்பஹான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சம்மாந்தறை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் எம்.ஏ.ஜமால் முகம்மது உள்ளீட்ட உறுப்பினர்கள் பலரும் ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment