அனுராதபுரம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்துவருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடரும் பலத்த மழையினால் மாதுறு ஓயா பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இதனால், மட்டக்களப்பு ஏறாவூர்பற்று தெற்கு மற்றும் மத்திய பகுதிகளிலுள்ள சிலரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் நேற்றுமுதல் பெய்துவரும் மழையினால் இங்கினியாகல பகுதியைச் சேர்ந்த 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இன்றும் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
0 comments :
Post a Comment