தரம் ஒன்றிற்காக மாணவர்களை சேர்க்கும் வித்தியாரம்ப விழா" இன்று 16.01.2014 நிந்தவூர் அல் அதான் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திருமதி AM சலீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், AL தவம், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் MAM தாஹிர், பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் YL சுலைமா லெவ்வை, நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி SLM சலீம், ஆசிரிய ஆலோசகர் திருமதி MY நஜிமுன்னிசா, நிந்தவூர் மதீனா பாடசாலையின் அதிபர் S அஹமது மற்றும் கல்விமான்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இம்முறை புதிதாக அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அதிதிகளால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு, இப்பாடசாலையில் நிலவும் குறைகள் பற்றி கலந்து கொண்ட அதிதிகளின் கவனதிற்கு பாடசாலை அதிபர் கொண்டுவந்தார். இதேவேளை இம்முறை இந்த பாடசாலையில் 110 மாணவர்கள் முதலாம் தரதிற்காக சேர்த்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment