சீ
னாவின் மிகவும் ஏழ்மையான மாகாணங்களில் ஒன்றான சிட்சுவானில் லியாங்ஷான் விவசாயிகளின் கூட்டுறவு அமைப்பு ஒன்று செயல்படுகிறது. இந்த விவசாய சங்கம் சார்பாக காய்கறி தோட்டங்கள், பழப்பண்ணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சங்கத்தின் வருமானம் அருகிலுள்ள வங்கி ஒன்றில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டின் மொத்த வருமானமான 22 லட்சம் டாலர் மதிப்புடைய சீனப் பணக்கட்டுகளை அந்த வங்கியில் இருந்து பாதுகாப்புடன் எடுத்து வந்தனர். மாலையில் எடுத்து வரப்பட்ட அந்த பணத்தை, அங்குள்ள ஒரு கிராம அலுவலகத்தின் வெளியே சுவர் போன்று அடுக்கி வைத்தனர்.
2 மீட்டர் நீளம், அரை மீட்டர் அகலத்திற்கு சுவரைப் போன்று அடுக்கி வைக்கப்பட்ட அந்த பணக்கட்டுகளை 7 காவலாளிகள் பாதுகாத்தனர். இதில் அந்த பணக்கட்டுகளின் மீது 3 காவலர்கள் படுத்து உறங்கினர்.
பிறகு மறுநாள் காலை சங்க உறுப்பினர்களான 340 பேருக்கும் அந்த பணம் பிரித்து கொடுக்கப்பட்டது.

0 comments :
Post a Comment