காத்தான்குடியில் ஆறு கோடி செலவில் நவீன நூலகம் நிர்மாணிப்பு -ஹிஸ்புல்லாஹ் பார்வை

பழுலுல்லாஹ் பர்ஹான்-

 காத்தான்குடியில் தகவல் தொழிநுட்ப வசதிகளடங்களாக நவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டிடத் தொகுதியில் நவீன பொது நூலகம் ஒன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் உத்தரவில் சுமார் ஆறு கோடி ரூபா செலவில் இப்புதிய நூலக கட்டிட தொகுதி தற்போது காத்தான்குடி அட்வகேட் எம்.சி அப்துல் காதர் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக காத்தான்குடி நகர சபைத் தலைவர் எம்.எச்.எம். அஸ்பர் தெரிவித்தார்.

இப்புதிய நூலக கட்டிடத் தொகுதி அபிவிருத்திப் பணிகளை பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா காலை நேரில் சென்று பார்வையிட்டு தேவையான ஆலோசனைகளை வழங்கினார் இந்த விஜயத்தின் போது பிரதி அமைச்சருடன் கிழக்கு மகாண சபை உறுப்பினர் சிப்லிபாறுக் மற்றும் அதிகாரிகளும் சமர்ப்பித்திருந்தனர்.

இப்புதிய நூலக கட்டிடத் தொகுதியில் நவீன வசதிகள் கொண்ட தகவல் தொழிநுட்ப கற்கை வசதிகள் உட்பட வேறு வசதிகள் உருவாக்கப்பட இருப்பதாகவும் சுமார் ஆறுமாத காலத்துக்குள் இதன் கட்டிட நிர்மாணப்பணிகள் பூர்த்திசெய்யப்படவுள்ளதாக  பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :