பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அட்டாளைச்சேனை தவிசாளர் கடிதம்

கௌரவ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் சிந்தனையின் கீழ் வறுமையற்ற நாடாக இலங்கையை மாற்றுகின்ற நோக்குடன் 'வறுமையற்ற இலங்கை' எனும் திட்டத்தை உருவாக்கி, கிராமங்கள் தோறும் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிகிறேன்.

அதன்படி, அட்டாளைச்சேனை பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட 32 கிராம சேவகர் பிரிவுகளிலும், இத்திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு தங்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பயனாளிகள் தெரிவில் வெளிப்படைத்தன்மையோ அல்லது உரிய நியமங்களோ பின்பற்றப்படவில்லை எனவும் மக்கள் என்னிடம் பலதரப்பட்ட வகையிலும் முறைப்பாடு தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமன்றி, இவ்வாறான திட்டம் அரசினால் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பில் தாம் எவ்விதத்திலும் அறிந்திருக்கவில்லை என இத்திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் முன்னுரிமைபெறத்தக்க இப்பிரதேச வறிய மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையில், கௌரவ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அவர்களால் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை அடைவது கேள்விக்குறியாகியுள்ளதோடு, அரச நிதியும் விரையமாகிவிடக் கூடிய அபாயமும் காணப்படுகிறது.

எனவே, மேற்படி பொது மக்களால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் உண்மை நிலையை அறிந்து கொள்ளும் பொருட்டும், பயனாளிகள் தெரிவில் காணப்படும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதத்திலும், பிரதேச சபையின் தவிசாளராகிய நான், இப்பிரதேச மக்களின் பிரதி நிதி என்ற அடிப்படையிலும், இந்த நாட்டு மக்களுக்கு இருக்கின்ற தகவல் அறியும் சுதந்திரத்தின் அடிப்படையிலும் தங்களால் 32 கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் விபரத்தை எனக்கு அனுப்பி வைக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.


எம்.ஏ. அன்ஸில்,

தவிசாளர்.

பிரதி :



01. கௌரவ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், கொழும்பு.

02. கௌரவ முதலமைச்சர், முதலமைச்சர் செயலகம், கிழக்கு மாகாணம்.

03. கௌரவ ஆளுநர், ஆளுநர் செயலகம், கிழக்கு மாகாணம்.

04. அரசாங்க அதிபர், கச்சேரி, அம்பாரை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :