இலங்கையில் மாநாடு நடப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு

லங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்துவதைக் கண்டித்து நவம்பர் 12ம் திகதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது. 

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்க உள்ளது. "இதில் இந்தியா பங்கேற்கக்கூடாது´ என தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பல்வேறு அரசியில் கட்சிகளும் "மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது´ என வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்துவதைக் கண்டித்து நவம்பர் 12ம் திகதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சங்கத் தலைவர் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் நடந்த இனப் படுகொலை மனித குலத்திற்கு எதிரானது. ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை கொன்று புதைத்த இலங்கை ஜனாதிபதியும் கூட்டாளிகளும் இனப்படுகொலை போர்க்குற்றத்துக்கான தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

காமன்வெலத் மாநாடு இலங்கையில் நடந்தால் உலகளவில் இலங்கைக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்து போர்குற்றம் என்பது நீர்த்துப்போகும். காமன்வெல்த் மாநாட்டை நடத்த இலங்கைக்கு தகுதி கிடையாது.

மாநாடு இலங்கையில் நடத்துவதை தடுத்த நிறுத்த வேண்டும். காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பிலிருந்து இலங்கை நீக்கப்பட வேண்டும். போர் குற்றத்துக்காக இலங்கை ஜனாதிபதி அவரது கூட்டாளிகளைத் தண்டிக்க காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலிறுத்தி, நவம்பர் 12ம் திகதி தமிழகம் முழுவதும், முழு நாள் கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். அன்றய தினம், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :