காத்தான்குடி -கல்லடி பகுதியில் விபச்சார விடுதி ஒன்று முற்றுகை

-இதுரீஸ் -
ட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கல்லடி பகுதி ஹோட்டல் ஒன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட அனுமதிக்கு அமைய காத்தான்குடி பொலிஸார் நேற்று (05) மாலை குறித்த ஹோட்டலை சுற்றிவளைத்துள்ளனர். 

இதன்போது விபச்சார விடுதியை நிர்வகித்த பெண்ணும் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட பெண்கள் வவுனியா மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாவர்.

  சந்தேகநபர்கள் இன்று  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். 

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :