சந்தைகளில் பால் மா தட்டுப்பாடு நிலவுவதாக கிடைக்கப்பெற்றுள்ள தகவலை அடுத்து அது குறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
பால் மா களஞ்சியங்களை பரிசோதித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதென அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, மில்கோ நிறுவன பால் மா உற்பத்தி குறித்து நிறுவனத்தின் தலைவர் சுனில் விக்ரமசிங்கவிடம் அத தெரண வினவியது.
அதற்கு பதில் அளித்த அவர், தமது நிறுவனம் வழமைபோல் பால் மா உற்பத்தி செய்து வருகின்ற போதும் சந்தைகளில் பால் மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென தகவல் வருவதாக தெரிவித்தார்.

0 comments :
Post a Comment