யாழ்ப்பாணத்தில் தமிழர்களைப் போன்று சிங்களவர்களும் வாழ இடமளிக்க வேண்டும் - ரவி குமார்

யாழ்ப்பாணத்தில் தமிழர்களைப் போன்றே சிங்களவர்களும் வாழ்வதற்கு இடமளிக்கப்பட வேண்டுமென யாழ்ப்பாண தமிழ் பௌத்த சங்கத்தின் தலைவர் ரவி குமார் தெரிவித்துள்ளார். 

கொழும்பு வெள்ளவத்தையில் தங்கியிருக்கும் தமிழர்களை யாழ்ப்பாணத்திற்கு செல்லுமாறு சிங்கள மக்கள் கோரவில்லை. வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் வாழ்வதனைப் போன்று, யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் வாழ ஏற்பாடு செய்யப்பட வேண்டும். 

போர் நிறைவடைந்துள்ள நிலையில் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனினும், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்கள் மீண்டும் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. 

சிங்கள தமிழ் மக்கள் சந்தோசமாக வாழ முடியும். இந்தியாவோ, அமெரிக்காவோ இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்ய வேண்டியதில்லை. சிங்கள தமிழ் மக்களினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :