-ஏ.ஜி.ஏ.கபூர்-
அம்பாரை மாவட்டத்திலுள்ள பிரதேச ஊடகவியலாளர்களுக்கான மனித உரிமைகள் சம்பந்தமான அறிவூட்டல்; செயலமர்வு ஒன்று நேற்றும் (06.11.2013) இன்றும் (07.11.2013) அம்பாரை ஆரியவன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரனையுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட இந்த இரண்டு நாள் வதிவிடப் பயிற்சிச் செயலமர்வினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அம்பாரை பிராந்திய இணைப்பாளர் பி.டபிள்யூ.சந்திரசிறி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டச் செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, அதன் நிருவாகம் மற்றும் நிதித்துறைக்கான பணிப்பாளா சட்டத்தரணி; பிரசன்ன றம்பதி, கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர் தமயந்தி கருணா ரத்ன, முதலியோர் பயிற்சிகளை வழங்கினார்கள்
சிங்கள மொழியில் நடைபெற்ற இப் பயிற்சிச் செயலமர்வில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்தசிங்கள மொழிப் பிராந்திய ஊடகவியலாளர்களுடன் சிங்கள மொழி தெரிந்த முஸ்லிம் தமிழ் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment