பிரான்ஸ் பத்திரிக்கையாளர்கள் கொலை - 35பேர் கைது

மாலியில் இரண்டு பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மாலியில் உள்ள ரேடியோ பிரான்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிலையத்தில் கிளாட் வெர்லன் மற்றும் கிஸ்லெய்ன் டூபான்ட் என்பவர்கள் பணிபுரிந்து வந்தனர்.

கடந்த 2ம் திகதி இவர்களை கிடால் நகரில் வைத்து கடத்திச் சென்ற தீவிரவாதிகள், படுகொலை செய்தனர்.

இச்சம்பவம் குறித்து கிடால் நிர்வாகம் கூறுகையில், இரு பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கடந்த 48 மணி நேரத்தில் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் நின்றிருந்த வாகனத்தில் இருந்து முக்கியமான தொலைபேசி எண்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மாலியில் 2011ஆம் ஆண்டு இரண்டு பிரெஞ்சுக்காரர்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகள், இந்தக் கொலை வழக்கு விசாரணையில் உதவி புரிந்து வருவதாக மாலி பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :