
தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கவர்ச்சி நடிகை ரோஸ்லின் கான் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.
ரோஸ்லின் கான் ஒரு விளம்பரப் பிரியை ஆவார். ஏதாவது ஒரு சலசலப்பில் அவ்வப்போது சிக்குவது இவரது இயல்பாகி விட்டது.
சில மாதங்களுக்கு முன்பு இவரது கவர்ச்சிப் படங்கள் நிறைய வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வுக்காக இவர் கொடுத்திருந்த போஸ்களும் சர்ச்சையை ஏற்படுத்தின.
ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் இவர் நடிக்கவுள்ளதாகவும் பேச்சு அடிபட்டது. அந்தப் படத்தில் செக்ஸைத் தேடி அலையும் குடும்பப் பெண் வேடத்தில் அதாவது சவீதா பாபி வேடத்தில் ரோஸ்லின் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பாலியல் அத்துமீறல் புகாரை கிளப்பியுள்ளார் ரோஸ்லின்.
ரோஸ்லின் கான் வீடு மும்பையில் காரேகான் பகுதியில் உள்ளது. அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். சம்பவ நாளன்று இரவு தனது சகோதரியுடன் அவர் காரில் வந்துள்ளார்.
வீட்டுக்கு நடந்து போய்க் கொண்டிருந்தபோது கபில் ஜாப்ரி என்பவர் தன்னை மானபங்கம் செய்ததாக பொலிசில் புகார் கூறியிருந்தார் ரோஸ்லின் கான்.
இதனைத் தொடர்ந்து கபிலை பொலிசார் கைது செய்தனர். ஆனால் தான் ரோஸ்லினுடன் சண்டை போட்டது உண்மைதான். ஆனால் மானபங்கம் செய்யவில்லை என்று கபில் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதனால் ரோஸ்லின் சொல்வது உண்மையா என்பதை அறிய அங்குள்ள ரகசியக் காமெராப் பதிவை ஆராய பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.
தற்போது கபில் ஜாப்ரி ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.
0 comments :
Post a Comment