குளத்திலிருந்து மீன்களை வேட்டையாடிய ராட்சத எலிகள் - சீனாவில் பரபரப்பு

சீனாவில் குளத்திலிருந்து மீன்களை வேட்டையாடிய ராட்சத எலிகள் கொல்லப்பட்டன.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷாவோயாங் என்ற ஊரில், குளத்தில் இருந்த மீன்கள் திடீரென குறையத் தொடங்கின.

இதனால் அதிர்ந்து போன கிராம மக்கள் இரவு, பகல் பாராது குளத்தை கண்காணித்து வந்ததில் இரண்டு எலிகள் மீன்களை வேட்டையாடுவதை கண்டு அதிர்ந்து போயினர்.

இவைகள் சாதாரண எலிகளை விட பத்து மடங்கு பெரியதாகவும், 1 மீற்றர் நீளமும் உடையதாக இருந்தது.

இதில் ஒரு எலி, 3 கிலோ எடையுள்ள மீனைப் பிடித்து கரைக்கு எடுத்து வந்து, ஒரே மூச்சில் தின்றது.

இவ்வாறு, குளத்தில் உள்ள மீன்களை காலி செய்யும் எலிகளை பிடித்த மக்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு கொன்று விட்டனர்.

அத்துடன் அந்த எலியை சமைத்து சாப்பிட்டுள்ளனர். கோழியை விட மூன்று மடங்கு சத்தானது எலிக்கறி என சீன மக்கள் நம்புகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :