சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் -செல்வம் அடைக்கலநாதன்

மிழ் மக்களின் நிரத்தர தீர்வுக்காக அரசுக்கு கொடுத்த காலவரையறை நிறைவடையும் நிலையில் எனது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,

நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரு போனஸ் ஆசனங்களுடன் 30 ஆசனங்களைப் பெற்று அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கின்றது.

இதில் நான்கு அமைச்சுக்கான நியமனங்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் கூடி ஆராய்ந்த போது எமது தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் (டெலோ) ஒரு அமைச்சுப் பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அதனை எமது கட்சி யாழ்ப்பாணத்தில் சிவாஜிலிங்கத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளது. இதனை கட்சி ரீதியாக நான் ஏற்றுக் கொண்டாலும், நீண்டகாலமாக எம்முடன் இருக்கும் வன்னி மக்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. இதனால் கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகத் தீர்மானித்துள்ளேன்.

கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினாலும், திட்டமிட்டபடி எனது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

நான் கடந்த வருடம் சிறிலங்கா அரசுக்கு, தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கொடுத்திருந்தேன். ஒரு வருடத்திற்குள் பிரச்சனை தீர்க்கப்படாதுவிடின் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சிறிலங்கா பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தேன்.

ஆனால் அரசு இன்னும் எமது மக்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வை முன்வைக்கவில்லை. எனவே, நான் கட்சித் தலைமையில் இருந்து விலகினாலும் திட்டமிட்டபடி வரும் நவம்பர் மாதம் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :