ரணில் விக்கிரமசிங்கவை தலைவர் பதவியிலிருந்து விலக்குமாறு ஆர்ப்பாட்டம் அங்கு துப்பாக்கி சூடு

மாத்தறை நகரப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை எற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தலைவர் பதவியிலிருந்து விலக்குமாறு கோரி இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இப் பகுதியில் பதற்றமான நிலை காணப்படுகிறது.

இந்த பகுதியில் இரண்டு துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டதாகவும் இந்நிலையில் இருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

மாத்தறை, தெவிநுவர பிரதேசத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணவர்தன மற்றும் ஷிரால் லக்திலக்க தலமை தாங்கினர்.

இதேவேளை மாத்தறை, வெல்லமடின் பிரதேசத்தில் அரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெற்றது.

மாத்தறை நகரப்பகுதியில் இரு பகுதியினரும் சந்தித்தவேளை இரு குழுக்களுக்கும் இடையில் மோதல்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :