ஆண்கள் தமது 13வயது வளர்ப்பு மகளை திருமணம் செய்யலாம் - சட்டம் நிறைவேற்றம்


ரானில் ஆண்கள் தமது 13வயது வளர்ப்பு மகள்மாரை திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதிக்கும் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச்சட்டமானது அந்நாட்டின் புதிய ஜனாதிபதி ஹஸன் ரோவ்ஹானி தனது மிதவாதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றத்தை எட்டவில்லை என்ற கவலையை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஈரானிய பாராளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டம் சிறுமிகள் தமது 13 வயதில் தமது வளர்ப்புத் தந்தையையும் 15 வயதுடைய சிறுவர்களையும் திருமணம் செய்வதற்கு அனுமதியளிக்கின்றது.

அதேசமயம் 13 வயதுக்கு குறைந்த சிறுமிகள் தமது தந்தையின் அனுமதியை மட்டுமே பெற்று திருமண பந்தத்தில் இணைய முடியும்.

ஈரானிய ஜனாதிபதி ரோஹ்ஹானி அமெரிக்க ஜனாதி பராக் ஒபாமாவுடன் முக்கியத்துவமிக்க தொலைபேசி உரையாடலை மேற்கொண்டு சில தினங்களில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் அமெரிக்காவுக்கிடையே நேரடி பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றமை கடந்த 34 வருடங்களில் இதுவே முதற் தடவையாகும். இது தொடர்பில் ஈரானிலுள்ள நீதிக் குழுவொன்றுக்காக பணியாற்றி வரும் சட்டத்தரணியான ஷாடா சாட்ர் விபரிக்கையில்,தத்தெடுத்த குழந்தையொன்றை திருமணம் செய்ய ஈரானிய கலாசாரத்தின் ஓர் அங்கமல்ல.

இத்தகைய நிகழ்வுகள் ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஈரானில் குறைவாகவே இடம்பெறுகின்றன.ஆனால்,தற்போது நிறைவேற்றப்பட்ட சட்டம் சிறுவர் துஷ்பிரயோகத்தை சட்டபூர்வமாக்குவதாக உள்ளது என்று கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :