ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்க பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் செயற்குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது தலைமைப் பதவி மாற்றம் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்க நீடிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
தீர்மானங்களை எடுக்கும் அதிகாரங்களை வழங்கக் கூடிய கட்சி அதி உயர் பீடமொன்றை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த அதிஉயர் பீடத்தை உருவாக்குவது தொடர்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் எதிர்வரும் 10ம் திகதி மீளவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன. கட்சியில் அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென பல உறுப்பினர்கள் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போது ஐக்கிய தேசிய கட்சியின் மீளமைப்புக்காக, விசேட சபை ஒன்றை அமைக்க அந்த கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போது ஐக்கிய தேசிய கட்சியின் மீளமைப்புக்காக, விசேட சபை ஒன்றை அமைக்க அந்த கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
உத்தேச விசேட சபை தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தென் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, கரு ஜெயசூரிய ஆகியோர் இணங்கியிருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, தேசிய அமைப்பாளர் தயா கமமே ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்கள்.
நேற்று மாலை இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போது அவர் இவ் அறிவிப்பை விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் மீளமைப்புக்காகவே அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

0 comments :
Post a Comment