பணம் சம்பாதிப்பதற்கு அரசியலே சிறந்த வழி

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற மேல்சபை எம்.பி. சவுத்திரி பிரேந்தர் சிங் அம்பாலாவில் ஒரு கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது:–
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துக்காக முன்பு பலரும் அரசியலுக்கு வருவார்கள். ஆனால் இப்போது அந்த நிலை மாறி விட்டது. இப்போது ஏதாவது வேலை கிடைக்கா விட்டால் அரசியலுக்கு வந்து விடுகிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு அரசியல் ஒரு தொழில் மாதிரி ஆகிவிட்டது.

தொழில் செய்து தோல்வி அடைந்தவர்களுக்கும் நல்ல டாக்டர், என்ஜினீயர் ஆக முடியாதவர்களுக்கும் அரசியல்தான் அடைக்கலமாக உள்ளது. பணம் சம்பாதிப்பதற்கு அரசியல் தான் சிறந்த வழி என்று நினைக்கிறார்கள்.

நிறைய அரசியல்வாதிகளுக்கு அதில் வெற்றி கிடைத்துள்ளது. அரசியல் மூலம் பணம் சம்பாதித்து ஏராளமானவர்கள் கோடீசுவரர்களாக மாறியுள்ளனர்.

சிலர் அரசியலில் ஈடுபடும் கொஞ்ச நாளிலேயே லட்சத்தில் அல்ல கோடியில் மிதக்கிறார்கள். மிக எளிதாக அரசியலை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள். இத்தகைய நபர்களால் மக்களுக்காக சேவை செய்ய வந்துள்ள சரியான,உண்மையான அரசியல்வாதிகள் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பிரேந்தர் சிங்கின் இந்த பேச்சு காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இவர் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ‘‘மேல்சபை எம்.பி. சீட் விற்பனை செய்யப்படுகிறது. அந்த பதவியைப் பெற ரூ.100 கோடி கூட கொடுக்க சிலர் தயாராக உள்ளனர்’’ என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :