எங்கே போகுதோ வானம்... - ரஜினியின் கோச்சடையான் பாடல் இன்று வெளியானது -பாடல் இணைப்பு

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படத்தின் ஒற்றைப் பாடல் இன்று உலகெங்கும் வெளியானது. எங்கே போகுதோ வானம் அங்கே போகிறோம் நாமும் எனத் தொடங்கும் அந்தப் பாடலை யுட்யூப் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

சவுந்தர்யா இயக்கத்தில், ரஜினி - தீபிகா படுகோன் நடித்துள்ள படம் கோச்சடையான். மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் 3டியில் வெளியாகும் இந்தியாவின் முதல் திரைப்படம் கோச்சடையான்தான். இந்தப் படத்தின் முதல் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி, 4 மில்லியன் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டது. 

ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ஒற்றைப் பாடல் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். அதன்படி எங்கே போகுதோ வானம், அங்கே போகிறோம் நாமும் என்ற பாடல் இன்று அதிகாலையிலேயே யு ட்யூபில் வெளியாகியுள்ளது. 

சோனி மியூசிக் நிறுனத்தின் தளத்தில் வெளியாகியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வைரமுத்து எழுதி, எஸ் பி பாலசுப்பிரமணியம் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். முத்து படத்தில் ரஜினிக்காக உருவாக்கப்பட்ட ஒருவன் ஒருவன் முதலாளி பாடலுக்கு இணையாக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

கோச்சடையான் பாடல்களை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வைத்து வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் முதல் பாடலை யு ட்யூபில் வெளியிட்டுள்ளனர். ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :