புத்தளம் – சென் அன்ரூஸ் பாடசாலையில் இருந்து வாக்குச் சீட்டுக்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த விசாரணை இன்று (07) ஆரம்பமாகிறது. வாக்குச் சீட்டு மீட்கப்பட்டமை குறித்து பலதரப்பட்ட விசாரணைகள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து பொலிஸ் மற்றும் தேர்தல் திணைக்கங்கள் நடத்திய விசாரணை முடிவுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று ஆரம்பிக்கப்படும் விசாரணைகள் தொடர்ந்து 30 நாட்களுக்கு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் தலைமையில் இவ்விசாரணை நடத்தப்படுவதோடு விசாரணை குழு இன்று புத்தளம் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளது.

0 comments :
Post a Comment