தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் டெங்கு ஒழிப்பு தின ஒன்று கூடல்

-எம்.வை.அமீர்-
நாட்டில் சுகாதார அமைச்சினால் 07ம் திகதி முதல் 13ம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில், சம்மாந்துறை சுகாதார வைதிதிய அதிகாரி பணிமனையின் அனுசரணையுடன் பிரயோக விஞ்ஞான பீட  சிரேஷ்ட உதவி பதிவாளர் பீ.எம்.முபீன் தலைமையில் ஒன்று கூடல் ஒன்று இன்று இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் சம்மாந்துறை சுகாதார வைதிதிய அதிகாரி பணிமனையின் சார்பில்  சம்மாந்துறை பொதுச்சுகாதார உத்தியோகத்தர் எம்.ராஜ் குமார் டெங்கு நுளம்பு  பரவும் விதம் குறித்தும் அதன் தாக்கங்கள் சம்மந்தமாகவும் அதனைக்கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் நீண்ட கருத்துப்பரிமாற்றங்களை மேற்கொண்டார். 

சிரேஷ்ட உதவி பதிவாளர் பீ.எம்.முபீன் தனது உரையில் வளாகத்தின் சுகாதாரத்தை மேன்படுத்துவது சம்மந்தமாகவும் குழுக்களாக பிரிந்து வளாகத்தின் சுகாதார நிலையை கண்காணிப்பது சம்மந்தமாகவும் கருத்துக்களை வெளியிட்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :