ரணிலுக்கு எதிரான பேரணி மீதான தாக்குதல் சம்பவம்; விசாரணையில் முன்னேற்றம்

க்கிய தேசியக் கட்சி தலைமைத்துவ பொறுப்பிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட பேரணிமீது மாத்தறையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம், பொலிஸ் மாஅதிபரின் நேரடி கண்காணிப்புக்கு இலக்காகியிருப்பதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சுமார் 30 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்படுபவர்களும் எதிர்காலத்தில் கைது செய்யப்படுவார்கள் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்பில் தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு பொலிஸ் மாஅதிபர் நாளாந்தம் அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு எழுத்து மூலமான மூன்று ஆலோசனைக் கடிதங்கள் இதுவரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :