நான் ஒரு போதும் முஸ்லீம்களை பெருக விடமாட்டேன் - திலங்க சுமதிபால

கொழும்பு பொரளை தொகுதியில் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கு மட்டும் அங்கு சிறுபான்மையினரை பெருக விடமாட்டேன். என பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார். 

நான் கல்வி பயிலும் காலத்தில் எனது தொகுதியில் 54 வீதமாக பௌத்தர்கள் இருந்தார்கள் ஆனால் தற்பொழுது 47 வீதமே உள்ளனர். 

தற்பொழுது பொராளைத்தொகுதியில் உள்ள பௌத்த விகிதாசாரத்தை கட்டி பாதுகாத்து வருகின்றேன். இப்பிரதேசத்தில் ஒரு போதும் முஸ்லீம்களை பெருக விடமாட்டேன் எனவும் தெரிவித்தார்.

ஒருகொடவத்தையில் ஸ்டுவார்ட் வீதி சந்தியில் உள்ள லேபர் தொடர்மாடி 35 வீடுகள் உடைக்கப்படுவது சம்பந்தமாக பண்சலைக்குள் வைத்து தேரர்களுடன் உரையாற்றும்போதே மேற்கண்ட தகவலை சூழ்ச்சியமாக தேரர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க தெரிவித்தார்.

அமைச்சர் பௌசி அவரது இனத்திற்காக பேசுகின்றார். யாழ்ப்பாணத்தில் ரீ.என்.ஏ அவர்களது இனம் பற்றி பேசுகின்றபொழுது எனக்கும் எனது இனம் பற்றி பேசுவதற்கு உரிமையுண்டு என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இந்த வீடுகள் உடைக்கப்படுவதை தடுப்பதற்கு அல்லது அதற்கு வேறு வழிகள் பற்றி கலந்துரையாடுவதற்கு அமைச்சர் பௌசியும் அழைக்கப்பட்டிருந்தார். 

அவர் அங்கு வந்து உரையாற்றிச் சென்று விட்டார் ஊருகொடவத்தையில் உள்ள 36 தொடர்மாடி வீடுகள் உடைக்கப்படுவது பாதை அபிவிருத்திக்காக இதற்காக அங்கு வாழ்ந்த 35 பௌத்த மக்கள் ஒன்று சேர்ந்து அமைச்சர் பௌசியை நாடி இது சம்பந்தமாக ஒரு தீர்வைப் பெற்றுத்தருமாறு வேண்டினார்கள். 

அதற்கமைவாகவே அமைச்சர் பௌசி இக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :