
பிரான்ஸ் ஸ்பைடர்மேன் என அழைக்கப்படும் ஆலன் ரூபர்ட், தற்போது புதிய சாதனையை படைத்துள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஆலன் ரூபர்ட்(வயது 51).
இவருக்கு உயரமான கட்டிடங்களில் ஏறி சாகசம் செய்வது என்றால் அலாதி பிரியம்.
இதனாலேயே பிரான்ஸ் ஸ்பைடர்மேன் என அழைக்கப்படுகிறார்.
இவர் பிரான்சின் ஈபிள் டவர், சிட்னியில் உள்ள ஓபரா கட்டிடம், அமெரிக்காவில் உயரமான கட்டிடமான எம்பயர் ஸ்டேட், கோலாலம்பூரில் உள்ள இரட்டை கோபுரம் உள்ளிட்ட கட்டிடங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் பாரிசில் உள்ள 185 மீற்றர் உயரம் கொண்ட GDF சூயஸ் கோபுரத்தின் மீது கடந்த 3ம் திகதி ஏறி சாதனை படைத்துள்ளார்.
காது மற்றும் தலைச் சுற்றல் நோயால் அவதிப்பட்டு வரும் ஆலன், கட்டிடங்களில் ஏறும் போது பலமுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு காரணம் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சிலந்தி போன்று ஏறுவதே ஆகும்.
0 comments :
Post a Comment