சிறுமியை சீரழித்த கணவன் - மனைவி தீக்குளித்து மரணம்

சென்னை வியாசர்பாடி பகுதியைச்சேர்ந்த எண்கணித சோதிடர் அரவழி சித்தர் (வயது 42). மனைவி தனலட்சுமி. 

 இவன், அதே பகுதியில் இரவு நேர பூஜைகள் செய்வதும், குறிசொல்வதும் தனி வேலையை செய்துவந்தான் இந்த சோதிடன்.


இந்நிலையில், சிபிசிஐடி பிடியில் ஒரு ஆந்திர சிறுமி சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் வியாசர்பாடியைச்சேர்ந்தவர் என்பதும், அரவாழி சித்தர் மூலமாக செண்ட்ரல் கடிகார கடை வைத்திருக்கும் சுரேஷ் என்பவனிடம் விற்கப்பட்டேன். அவன் என்னை ஒரு விபச்சார கும்பலிடம் விற்றுவிட்டான். 

 இது தவிர, சென்னை மெரினா கடற்கரையில் பல ஆட்களுடன் அவன் மூலம் கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளிவிடப்பட்டேன்.

இப்படி என் வாழ்க்கை சீரழிந்துவிட்டது. திருப்பதியில் ஆந்திராவிற்கு சென்று தலைமறைவாக வாழலாம் என்று முடிவு செய்து ரயில் மூலம் திருப்பதி சென்றேன். அங்கு வழிகாட்ட யாரும் இல்லாததால் திருப்பதி கோயில் வாசலில் படுத்துக்கொண்டேன். யாராவது உணவு கொடுத்தால் அதை சாப்பிட்டு ஓரளவு பசியாற்றி வந்தேன். 

 திடீரென அங்கு படுத்திருந்தவர்களை போலீசார் விரட்டியபோது, நானும் சிக்கிக் கொண்டேன். அவர்கள் என்னை தமிழ்நாடு போலீசாரிடம் ஒப்படைத்தார்கள் என்று தெரிவித்தார்.

இதையடுத்து அரவாழி, சுரேஷ் அவர்களுடன் இருந்து விபச்சாரத்தில் தள்ளிய 5 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்டுகள் உள்பட 9 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டவர்களின் ஜாமீன் மனு கோர்ட்டுக்கு வரும்போதெல்லாம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அரவாழியின் ஜாமீன் மனுவும் நேற்று நிராகரிக்கப்பட்டது. 

 இந்த சூழ்நிலையில் அரவாழியின் மனைவி தனலட்சுமி தன் வீட்டில் கழிவறையில் கெரசின் ஊற்றி தீவைத்துக் கொண்டார். வீட்டின் உரிமையாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் வருவதற்குள் தனலட்சுமி எரிந்து கரியாகிவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :