(ஏ.ஜீ.ஏ.கபூர்,அக்கரைப்பற்று)
அக்கரைப்பற்று எஸ்.ரி.தனியார் விதை நெல் உற்பத்தியாளர் சங்கமும் அக்கரைப்பற்று பண்ணை வியாபாரப் பாடசாலையும் இணைந்து ஏற்பாடு செய்ததரமான விதை நெல் உற்பத்தியும் சந்தைப்படுத்தலும் சம்பந்தமான பயிற்சிப் பட்டறையொன்று நேற்று 03.10.2013 வியாழக்கிழமை அக்கரைப்பற்று அம்பாரை வீதியில் 03வது மைல் கல்லடியில் அமைந்துள்ள சங்கத்தின் விதை நெல் உற்பத்தி செய்யும் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
தனியார் விதை நெல் உற்பத்தியாளர் சங்க உப தலைவர் எம்.ஐ.ஜவாத் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சிப் பட்டறையில் ;விவசாயத் திணைக்களத்ததின் அம்பாரை மாவட்ட பிரதிப் விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், உதவி விவசாயப் பணிப்பாளர் எம். ஸனீர், அம்பாரை விதை நெல் அத்தாட்சிப்படுத்தும் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஐ.நஸீர், விவசாயப் போதனாசிரியா(பயிற்சி) ஏ.எல்முபாறக், சிரேஷ்ட விவசாயப் போதனாசிரியர் எல்.எம்.இஸ்மாயில், விதை நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர், செயலாளர், அங்கத்தவர்கள்.விதை நெல் உற்பத்தியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தரமான விதை நெல் உற்பத்தியின் நோக்கம்- எல்.எம்.இஸ்மாயில், விதை நெல் உற்பத்தியும் சந்தை வாய்ப்பும்- ஏ.எல்முபாறக், புதிய இன நெல் வர்க்கங்களும் புதிய தொழில்நுட்ப பயன்பாடுகளும்-; பிரதிப் விவசாயப பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், விதை நெல் அத்தாடசிப்படுத்தலும் விதைச் சட்டமும் -அம்பாரை விதை நெல் அத்தாட்சிப்படுத்தும் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஐ.நஸீர், விதை நெல் பிரயோகத்தின் முன்னேற்றம்- உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.ஸனீர் முதலிய தலைப்புக்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
கலந்து கொண்ட விவசாயத் திணைக்களத்த்தின் அம்பாரை மாவட்ட பிரதிப் விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.ஸனீர், அம்பாரை விதை நெல் அத்தாட்சிப்படுத்தும் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஐ.நஸீர், விவசாயப விவசாயப் போதனாசிரியா(பயிற்சி) ஏ.எல்முபாறக், சிரேஷ்ட விவசாயப் போதனாசிரியர் எல்.எம்.இஸ்மாயில்,ஆகியோhhகளது சேவைக்காக அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டார்கள்.
0 comments :
Post a Comment