- நஸீப் முஹம்மட் -
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள கைதி ஒருவர் சிறைச்சாலையின் கூரை மீதேறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.மட்டக்களப்பு, புதூரைச் சேர்ந்த அன்ரன் ஜெயராஜ் (வயது 28) என்ற கைதியே இவ்வாறு கூரை மீதேறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இவர் தன்னை பொலன்னறுவைச் சிறைச்சாலைக்கு இடமாற்றக் கூடாது எனக் கூறியே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 6 மணியளவில் சிறைச்சாலையின் கூரை மீது இவர் ஏறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கைதிக்கு 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரை பொலன்னறுவை சிறைச்சாலைக்கு இடமாற்றுமாறு நீதிமன்றம் கோரியதற்கு அமைய இன்று காலை குறித்த கைதி இடமாற்றப்படவிருந்தார்.
இந்த நிலையில், இந்தக் கைதி தன்னை இடமாற்றக் கூடாது எனக் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இவ்வாறு கூரை மீதேறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்ற இந்தக் கைதியை கூரையிலிருந்து கீழே இறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கூரை மீதேறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்ற இந்தக் கைதியை கூரையிலிருந்து கீழே இறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment