விபச்சார விடுதி சுற்றிவளைப்பு - 7 பெண்கள் உட்பட 9 பேர் கைது


லங்கையின் தலைநகர் கொழும்பின் மருதானை பொலிஸ் பிரிவில் விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு ஏழு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில், விபச்சார விடுதியை நடத்திச் சென்ற இரண்டு ஆண்களும், அதற்கு உதவியாக இருந்த ஏழு பெண்களுமே கைதாகியுள்ளனர்.

கைதான பெண்கள் 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்கள் வலப்பனை, திருகோணமலை, வவுனியா, உடப்புஸ்ஸலாவ, வெல்லம்பிட்டிய, கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சந்தேகநபர்களை இன்று மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :