அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்ட : 9 மாடுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்

தெல்தேனிய பிரதேச போலிஸ் அதிகாரிகளால் நேற்று (6) அதிகாலை 4.30 மணியளவில் சிறிய ரக வேன் வண்டியொன்று சோதனையிடப்பட்ட போது 9 மாடுகள் அனுமதிப்பத்திரம் இன்றி கால்கள் கட்டபப்ட்டு நெருக்கமாக ஒன்றன் மேல் ஒன்று வைக்கபட்ட நிலையில் பிடிபட்டுள்ளது.

இவை மகியங்கனை, பகரகம்மன பிரதேசத்தில் இருந்து தெல்தேனிய ஊடாக மடவளைக்கு கொண்டு வரப்பட்டதென போலீசார் தெரிவிக்கின்ற அதேவேளை குறிப்பிட்ட வண்டியில் வந்த மூன்று பேரில் இருவர் தப்பியோட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

அனுமதியின்றி மாடுகளை வண்டியில் கொண்டு சென்றது மற்றும் அவற்றை நெருக்கமாக நோவினை செய்யும் வகையில் கொண்டு சென்றது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (7) தெல்தேனிய மாஜிஸ்திரேட் நீதிமன்றில் கையளிக்கப்பட உள்ளார்.  இச்சம்பவம் தொடர்பில் (இன்று) 'அத' பத்திரிகையில் வெளியான செய்தி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :