-ஏ.எல். ஜனூபர் -
கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட குளங்களின் புனர் நிர்மாணிப்பு பணிகள் சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அன்சார் தலைமையில் தம்பலகாம பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் திருகோணமலை மாவட்டத்தில் நான்கு நீர்ப்பாசனத் திட்டங்களை 37 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் கடந்த மூன்று தசாப்த கால யுத்தம், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்தை கிழக்கு மாகாண சபையின் உருவாக்கத்தின் பின் மூவினங்களுக்கும் சமமாக எமது அமைச்சினால் அபிவிருத்திப் பணிகளை முன் எடுத்துச் செல்லக் கூடியதாக உள்ளது என்றார்.
இந் நிகழ்வில் தம்பலகாம பிரதேச செயலாளர் T.R.M..ரோஹான் திஸாநாயக்க, பிரதேச சபைத் தவிசாளர் S.M.சுபியான், கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் A.H.M.அன்சார், உதவி செயலாளர் பிர்னாஸ், அமைச்சின் பிரத்தியோக செயலாளர் M.Iகியாவுடீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment