கள்­ளக்­கா­த­லியை நிர்வாணப்படமெடுத்து இணையத்தில் போடப் போவதாக மிரட்டிய வர்த்தகர்

ள்­ளக்­கா­த­லியை தாக்கி, நிர்­வாண கோலத்தில் புகைப்­ப­ட­மெ­டுத்து, இணை­யத்­த­ளத்தில் வெளி­யிடப் போவ­தாக அச்­சு­றுத்­திய வர்த்­தகர் ஒரு­வரை நீர்­கொ­ழும்பு பிர­தான நீதிவான் ஏ.எம்.என்.பி.அம­ர­சிங்க எதிர்­வரும் 15 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

நீர்­கொ­ழும்பு லுனு­கட சந்­தியில் அமைந்­துள்ள ஹார்ட்­வெயார் ஒன்றின் உரி­மை­யா­ள­ரான 26 வய­து­டைய ஒரு­வரே விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­வ­ராவார். சந்­தேக நபர் தளு­வத்தை பிர­தே­சத்தைச் சேர்ந்த 35 வய­து­டைய திரு­ம­ண­மான பெண்­ணுடன் கடந்த ஐந்து வருட கால­மாக இர­க­சிய தொடர்பு கொண்டு வந்­துள்ளார். வழக்கின் முறைப்­பாட்­டா­ள­ரான குறித்த பெண்ணின் கணவர் வெளி­நா­டொன்றில் தொழில் செய்து வரு­வ­தாக ஆரம்­ப­ கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்­துள்­ளது.

இதே­வேளை, முறைப்­பாட்­டா­ள­ருக்கு வேறு சில­ருடன் இர­க­சிய தொடர்பு இருப்­ப­தாக சந்­தேக நப­ருக்கு தெரிய வந்­துள்­ளது. இதனை அடுத்து தொலை­பேசிக் கட்­டணம் செலுத்­த­வென முறைப்­பாட்­டா­ளரை சந்­தேக நபர் அழைத்துச் சென்று தனது கடையின் களஞ்­சி­ய­சா­லையில் வைத்து அவரை தாக்­கி­யுள்­ள­துடன் நிர்­வாண கோலத்தில் அவரைப் புகைப்­படம் எடுத்­துள்ளார். பின்னர் நிர்­வாணப் படத்தை இணை­யத்­த­ளத்தில் வெளி­யிடப் போவ­தாக அச்­சு­றுத்­தி­யுள்ளார்.

இது தொடர்­பாக பாதிக்­கப்­பட்ட பெண் நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­ததை யடுத்து பொலிஸார் சந்­தேக நபரை கைது செய்து கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்த போதே சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :