31வயதான பெண்ணைக் கடத்திச் சென்று தங்கும் விடுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம்

சிலாபம் நகரிலிருந்து ஒரு பெண்ணைக் கடத்திச் சென்று தங்கும் விடுதியொன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகக் கூறப்படும் நபரொருவரை கைது செய்ய சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்குட் படுத்தப்பட்ட பெண் 31 வயதானவ ரென பொலிஸ் விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

தேவையொன்றுக்காக சிலாபம் நகருக்கு வந்தபோது இத் துஷ்பிர யோகத்துக்கு உட்படுத் தப்பட்டதாக சம்பந்தப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். தன் பின்னால் வந்த நபரொருவர் தன்னை பலாத்காரமாக வெள்ளை வானொன்றில் கடத்திச் சென்று பாலியல்


துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகவும் அப்பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். கடந்த 28 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றிருந்த போதும் பாதிக்கப்பட்ட பெண் கடந்த 4 ஆம் திகதியே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :