
தாம் காதலித்த யுவதியை வேறொரு இளைஞருக்கு திருமணம் செய்து கொடுத்ததால் கோபமுற்ற காதலன் முன்னாள் காதலியின் வீட்டைத் தீயிட்டு சேதப்படுத்தினார் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த யுவதி இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணமாகி கணவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். தாய் மகளைப் பார்க்க சென்றிருந்த போதே வீடு தீயிடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீயிட்டதால் வீட்டு தளபாடங்கள், புடவைகள் உட்பட பல பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் தனது காதலியைப் பார்க்க பல முறை இந்த வீட்டுக்கு வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரான இளைஞரை மாத்தளை நீதிவான் நீதிமன்றத் தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர்.
0 comments :
Post a Comment