அட்­டா­ளைச்­சேனையில் 15வயதான சிறுமியை 9நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்


திருக்­கோவில் விநா­ய­க­பு­ரத்தைச் சேர்ந்த 15 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த அட்­டா­ளைச்­சேனை பிர­தே­சத்தைச் சேர்ந்த 28 வய­தான நபர் ஒரு­வரை அக்­க­ரைப்­பற்று பொலிஸார் கைது செய்து திருக்­கோவில் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

இச் சம்­ப­வம்­பற்றி தெரி­ய­வ­ரு­வ­தா­வது, அட்­டா­ளைச்­சேனை கோணா­வத்தை பிர­தே­சத்தைச் சேர்ந்த 28 வய­தான ஒருவர் கடந்த மாதம் 26 ஆம் திகதி விநா­ய­க­புரம் நான்காம் பிரிவைச் சேர்ந்த 15 வயது சிறு­மியை அழைத்துச் சென்று சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் நண்பர் ஒரு­வரின் வீட்டில் வைத்து கடந்த 9 நாட்­க­ளாக பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த நிலையில் சிறு­மி­யுடன் சம்­ப­வ­தி­ன­மான கடந்த சனிக்­கி­ழமை இரவு 10.25 மணி­ய­ளவில் அட்­டா­ளைச்­சேனை பிர­தே­சத்­திற்கு வந்­தி­ருந்த­ போது அக்­க­ரைப்­பற்று பொலிஸார் குறித்த நப­ரையும் சிறு­மி­யையும் கைது செய்­தனர்.

இச் சம்­ப­வத்தில் கைது­செய்­யப்­பட்­ட­வர்­களை விசா­ர­ணையின் பின்னர் திருக்­கோவில் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­தனர். இத­னை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட சிறு­மியை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­துடன் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­வர் தொடர்ந்து தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் இவரை நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :