ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி நவநீதம் பிள்ளை இன்று காலை 11.10 மணிக்கு இளைஞர் பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினறும், சபை முதல்வருமான உதுமாலெப்பை முஹம்மட் சபீர் தெரிவித்தர்.
இங்கு விஜயம் செய்யும் மனித உரிமைகள் ஆணையாளர் 11.15 மணியில் இருந்து 12.00 மணி வரை விஷேட உரையையும், இளைஞர் பாராளுமன்ற சபை நடவடிக்கைகளையும் பார்வையிடுவதோடு அங்கு இடம்பெறும் நிகழ்வில் கொளரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளார்.
இலங்கை வரலாற்றில் ஐக்கிய நாடு சபையின் உறுப்பினர் ஒருவர் இளைஞர் பாராளுமன்றத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
0 comments :
Post a Comment