முன்மாதிரிக் கிராமமாக பிறைந்துரைச்சேனைக் கிராமம்.


கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் பிறைந்துரைச்சேனை 206 சி கிராமிய சிறுவர் கண் காணிப்புக் குழுவின் ஏற்பாட்டில் மதுபாவனையில் இருந்து கிராமிய சமுதாயத்தை பாதுகாத்து முன்மாதிரிக் கிராமமாக பிறைந்துரைச்சேனைக் கிராமத்தை மாற்றுவது எனும் செயல் திட்டம்  (21.06.2013) இடம் பெற்றது.

கிராமிய சிறுவர் கண் காணிப்புக் குழுத் தலைவர் மௌலவி ஏ.எல்.இஸ்மாயில் தலைமையில் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயம், சாதுலியா வித்தியால மாணவர்களுக்கு இச் செயலமர்வு இடம் பெற்றது.

இந் நிகழ்வின் வளவாலர்களாக ஓட்டமாவடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எச்.எம்.எம்.முஸ்தபா, வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி யூ.எல்.எம்.இமானுல்லாஹ், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.தாஸீம் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :