முஸ்லிம் பாடசாலை கற்பித்தல் மேம்படுத்தப்பட வேண்டும்.

முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்

முஸ்லிம் பாடசாலையில் முஸ்லிம் அமைப்புக்களினால் மாணவர்களுக்கான இலவச வட மாகாண கற்பித்தல் மேம்படுத்தப்பட வேண்டும்.வடமாகாணத்தின்
யாழ்ப்பாணம்,மன்னார்,முல்லைத்தீவு,கிளிநொச்சி,வவுனியா,போன்ற மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீளக்குடியேறிpய பிரதேசங்களில் பல முஸ்லிம் பாடசாலைகள் மீளவும் திறக்கப்பட்டுள்ளன. தரம் 05 வரையான பாடசாலைகள் , தரம் 11 வரையான பாடசாலைகள், க.பொ.த (உ.த.) கலை, வர்த்தகப் பாடசாலைகள் கணித,விஞ்ஞான,உயர்பிரிவுகள் உள்ள பாடசாலைகள் என்று உருவாகியுள்ளன. உதாரணம்- மன் முசலி மஹிந்தோதய.ம.வி, பண்டாரவெளி ம.வி, சிலாவத்துறை ம.வி, அல் அஸ்ஹர் ம.வி, எருக்கலம் பிட்டி மத்திய.ம.வி, தாராபுரம் அல்மினா ம.வி.

நாட்டில் உள்ள ஏனைய மாவட்டப் பாடசாலைகளுடன் தரம் 05 பெறுபேறுகள் தரம் 11 பெறுபேறுகள், கா.பொ.த. (உ.த.) பெறுபேறுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போதுவடபுல முஸ்லிம் பாடசாலைகளின் நிலைமை தாழ் நிலையில் இருப்பதைஅறியக்கூடியதாக உள்ளது.

இம் மக்கள் கல்வி நிலையில் பின் நிற்பதற்கு இங்குள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் பௌதீக வளப் பிரச்சினைகள், பணம் செலுத்தி மேலலதீகக்; கல்விகள் கற்க வசதியின்மை போன்றவற்றால் ஆகும்.

1990ம் ஆண்டுகளுக்கு முன்பு மர்ஹூம் நழீம் ஹாஜியார் அவர்களின் உயர் திட்டத்தால் வடமாகாண முஸ்லிம் பாடசாலைகளில் சனி, ஞாயிறு தினங்களில் இலவச உயர்தர வகுப்புக்கள் நடாத்தப்பட்டதையும் அதன் பெறுபேறாகஇங்கு இருந்ந பாடசாலை மாணவர்கள் சிறந்ந பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட வரலாறுகளை ஒரு போதும் நாம் மறக்க முடியாது.

இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள சிறந்ந முஸ்லிம் பாடசாலைகள் வடமாகாண முஸ்லிம் பாடசாலைளுடன் ஒரு சிறந்ந நட்புறவை உருவாக்கி தம்மால் இயன்ற கல்வி உதவிகளை வடபுல முஸ்லிம் பாடசாலைக்குச் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட வடபுல முஸ்லிம்மாணவர்களைத் தட்டிக் கொடுக்க வேண்டியபொறுப்பு முஸ்லிம் சமூகத்திற்கு உண்டு.

முஸ்லிம் நாடு;களில் இருந்து கிடைக்கும் பணஉதவிகள் மூலம், முஸ்லிம் இயக்கங்களான வை.எம்.எம்.ஏ. முஸ்லிம் லீக் ஜமாத்தே இஸ்லாமி, தௌஹீத் ஜமாத் , வாமி அமைப்புகள் என்பன சரியான ஓரு திட்டமிடலை வகுத்து வடபுல முஸ்லிம் பாடசாலை மாணவர்களின் கல்வி மட்டத்தை உயரச் செய்வதற்காக நடவடி;க்கைகளை எடுக்க வேண்டும். சனி, ஞாயிறு தினங்களிலும் பாடசாலை நாட்களைத் தவிர்ந்த பிற்பகலிலும்இலவச வகுப்புக்களைதரம் 05 மாணவர்கள், க.பொ.த. (சா.த)மாணவர்கள்,கா.பொ.த.உ.த.மாணவர்கள் அனைவருக்கும் நடாத்தப்பட வேண்டும்.

இலவசக் கையேடுகள், கற்றல் உபகரணங்கள் என்பனவும் வழங்கப்பட வேண்டும். சிறந்ந ஆசிரியர்களை இனங்கண்டு அவர்களுக்கு உரிய பொருத்தமான கொடுப்பனவுகளை வழங்கி இச்செயற்பாடு சிறப்பாக வெற்றிபெற முயற்சி செய்யப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட எமது சகோதர இனங்களுக்குச் செய்ய வேண்டிய இந்ந ஒரு மகோன்னத முயற்சியை நீPங்கள் அனைவரும் ஒன்று இணைந்து செய்யவேண்டும் என உரிமையுடன் நான் உங்களிடம் கோரிக்கை விடுகிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :