காதலன் வீட்டிற்கு முன் உண்ணா விரதம் இருக்கும் இளம்பெண்



கடையநல்லூர் அருகே காதலன் வீட்டின் முன் இளம்பெண் உண்ணாவிரதம்…
தென்காசியை சேர்ந்தவர் சாகுல்அமீது. இவரது மகள் ஷெரினா(வயது23). இவர் குற்றாலம்
கல்லூரியில் பி.ஏ.பொருளாதாரம் படித்து முடித்தார். கல்லூரி படிக்கும் போது, தன்னுடன் படித்த தோழியை பார்க்க கடைய நல்லூர் அருகே உள்ள இடைகால் கிராமத்திற்கு அடிக்கடி வந்துசென்றார்.

அப்போது ஷெரினாவுக்கும், இடைகால் ஏ.ஆர்.தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் பிரவீன்குமார்(25) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. வெவ்வேறு மதம் என்பதால் இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் கடும்
எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் கடந்த 2012–ம் ஆண்டு காதலர்கள் இருவரும் வீட்டை விட்டுவெளியேறி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு சென்று அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். 

பின்பு பிரவீன்குமார் திருச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு காதலியை அழைத்துச்சென்று குடும்பம் நடத்தினார்.

இதில் ஷெரினா கர்ப்பமானார். 2 மாதம் ஆன போது பிரவீன்குமார் கூறியதன்பேரில் ஷெரினா கருவை கலைத்துள்ளார். இந்நிலையில் ஊருக்கு சென்று பெற்றோரிடம் பேசி சேர்ந்து வாழலாம் என்று பிரவீன்குமார் கூறியிருக்கிறார். அதற்கு ஷெரின் சம்மதித்தார். இதனையடுத்து
காதலர்கள் இருவரும் இடைகாலுக்கு வந்தனர்.

ஆனால் பிரவீன்குமாரின் பெற்றோர், காதலர்களை பிரித்துவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து இலத்தூர் போலீஸ் நிலையத்தில் ஷெரினா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பிரவீன்குமாரின் தந்தை சுப்பிரமணியனை கைது செய்தனர். 

அதன்பிறகு ஷெரினா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது காதலர்கள் இருவரையும் சேர்த்துவைக்க ஷெரினாவின் குடும்பத்தினர் முயற்சி செய்தனர். 

அதன்படி இருவரது வீட்டினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் காதலர்கள்
இருவருக்கும் 8–8–13அன்று நயினாகரம் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துவிட்டு, பதிவுசெய்ய முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி ஷெரினாவும், அவரது குடும்பத்தினரும் நயினாகரம் பதிவாளர் அலுவலகத்திற்கு 8–ந்தேதி வந்தனர். ஆனால் பிரவீன்குமாரோ, அவரது குடும்பத்தினரோ அங்கு வரவில்லை.

காதலனின் குடும்பத்தினர் ஏமாற்றி விட்டதை அறிந்த ஷெரினா அதிர்ச்சியடைந்தார். அவர் தனது பெற்றோருடன் வீட்டிற்கு திரும்பிவந்தார்.

இந்நிலையில் இன்று ஷெரினா, இடைகாலில் உள்ள காதலன் வீட்டிற்கு வந்தார். ஆனால் காதலனின் வீடு பூட்டியிருந்தது.

 வீட்டில் யாரும் இல்லை. இதனைப்பார்த்த ஷெரினா, காதலனின் வீட்டின் முன் அமர்ந்து உண்ணா விரத போராட்டத்தை தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த இலத்தூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார்

சம்பவஇடத்திற்கு வந்து ஷெரினாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் தன்னை தனது

காதலனுடன் சேர்த்துவைக்கும் வரை உண்ணாவிரதத்தை கை விடப்போவதில்லை என்று கூறி,

அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார். அவர் தொடர்ந்து காதலன் வீட்டின் முன் அமர்ந்து

போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

காதலன் வீட்டின் முன் இளம்பெண் நடத்திவரும் இந்த போராட்டத்தால் இடைகாலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :