கல்வித்துறை ஊழியர்களை சந்திக்க மாகாண கல்விப் பணிப்பாளர் ஏற்பாடு

எம்.பைஷல் இஸ்மாயில்
ல்வியின் எதிர்கால இலக்கை இலகுவில் அடைந்து கொள்ளும் பொருட்டும், கல்வித்துறைப் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டும், திருகோணமலை தவிர்ந்த மாகாணத்தின் ஏனைய பகுதிகளிலும் கல்வித்துறை ஊழியர்களை சந்திக்க மாகாண கல்விப் பணிப்பாளர் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது சம்பந்தமாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத் தலைவர் எம்.அனஸ் ஒப்பமிட்டு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

திருகோணமலையில் அலுவலகத்தைக் கொண்டுள்ள, கிழக்கின் முதலமைச்சர், மாவட்டங்கள் தோறும் அதிகாரிகளை கூட்டி மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சித்து வருகின்றார். அவ்வாறே சுகாதாரத்துறை, விவசாயத்துறை மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்களும் நடமாடும் சேவைகள் பிற நிகழ்வுகள் மூலம் மக்கள் சந்திப்புக்களை நடாத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயினும், அம்பாறையில் வதிவிடத்தைக் கொண்ட கல்வி அமைச்சரோ அல்லது நிந்தவூர் வதிவிடத்தைக் கொண்ட மாகாண கல்விப் பணிப்பாளரோ கல்முனை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இத்தகைய சந்திப்புக்களை கிரமம் கிராமமாக நடாத்தி கல்வி வலயங்கள் தோறும் நிறைந்து வழியும் கல்வித்துறைப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்க்கமான தீர்வு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை மிகக்குறைவாகவே காணப்படுகின்றது.

குறிப்பிட்ட இப்பிரதேசங்களில் அதிபர், ஆசிரியர்கள் தம்தொழிற்துறை மற்றும் கல்வித்துறை தொடர்பில் எழுதும் கடிதங்களுக்கு சரியான பதில் அளிக்கப்படாத நிலையும், பிழையான வியாக்கியானங்கள் அளிக்கும் நிலையும் தொடர்ந்து கொண்டிருக்க கல்வி வலயங்களோ தான்தோற்றித்தனமாக தாபனக்கோவை விதிகள், நிதிப் பிரமாணங்கள் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு முரணான விதத்தில் தான் நினைத்தமாதிரி நடவடிக்கைகளை எடுத்து, கல்வித் துறை செயற்பாடுகளில் முரண்பாடுகளையும், சம்பந்தப்பட்டோருக்கு பெரும்பாதிப்புக்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஆகவே மேற்படியுள்ள குறைபாடுகள் யாவும் களையப்பட்டு, கல்வித்துறை பிரச்சினைகளுக்கு முடியுமானவரை உடனுக்குடன் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் மாகாணக் கல்வி அமைச்சரும், மாகாண கல்விப் பணிப்பாளரும் இப்பிராந்தியங்களில் ஒரு சந்திப்புக்களை நடாத்த வேண்டும்.

இது தொடர்பாக திருகோணமலைக்கு சென்று அங்கு இவை தொடர்பில் ஒரு திருப்தியான பதிலை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் வீடு திரும்பும் அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இவ்வாறாதொரு சந்திப்புக்களை ஏற்படுத்த முனையமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :