தனது தம்பிக்காக கடந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை அவரது அக்கா தவற விடப்பட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தில் இடம் பெற்றுள்ளது.
மேலும் இம்முறை கடந்த 25 ஆம் திகதி நடைபெற்று முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றாமல் வீடுகளில் மறைந்திருந்ததாகக் கூறப்படும் ஏழு மாணவர்களை பொலிஸார் அழைத்துச் சென்று பரீட்சை நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டதின் கால்குடா பொலிஸ் பிரிவிலேயே இந்தச் சம்பவம் நேற்று ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சை நடைபெற்ற தினத்தன்று இடம் பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்,
கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் ஐந்தாம் அண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன இதன்போது மாணவர்கள் சிலர் பயத்தினால் பரீட்சை நிலையத்திற்கு சமூகமளிக்காத நிலமை காணப்பட்டது.
இது தொடர்பாக பரீட்சை நிலையத்திற்கப் பொறுப்பான அதிகாரி ஒருவர் பாதுகாப்புக் கடமைக்கு வந்த பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார் இதனடிப்படையில் கல்குடா பொலிஸார் அப்பகுதி சிவில் பாதுகாப்புக் குழுக்களின் உதவியுடன் இணைந்து மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை பரீட்சை நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது இவ்வாறிருக்க ஒரு விட்டில் ஐநதாம் ஆண்டு புமைப்பரிரில் பரிட்சைக்கு தோற்றும் மாணவி ஒருவர் தனது தாய் வீட்டில் இல்லாததன் காரணமாக தானே தனது இளைய சகோதரனைப் பராமரித்துக் கொண்டிருந்தார். இதன் காரணமாக இன்று பரீட்சைக்குச் செல்ல வில்லை எனவும் அம்மாணவி தெரிவித்தார். இந்த நிலையில் பொலிஸார் இந்தச் சிறுமியை மாத்திரம் விட்டு விட்டு ஏனைய ஏழு மாணவர்களையும் அழைத்து வந்த பரீட்சை நிலயத்தில் ஒப்படைத்தனர் என்பதும் குறிப்பிடத் தக்தாகும்

0 comments :
Post a Comment