சவுதி அரேபிய இளவரசி அந்நாட்டுப்பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்

வுதி அரேபிய இளவரசி மெஷேல் அலேபன், கென்ய நாட்டுப் பெண் ஒருவரை கட்டாயத்தின் பேரில் வேலைக்கமர்த்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் 42 வயதான இளவரசிக்கு மனிதக்கடத்தல் சட்டத்தின் கீழ் 12 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு, குறித்த பெண் வேலைக்காக சவுதி அரேபியா அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு வந்ததும் அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து இளவரசி மெஷேல் அலேபன் அவரை வீட்டு வேலைக்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

30 வயதுடைய பணிப்பெண்ணுக்கு குறைந்தளவு ஊதியம் வழங்கியதுடன் பணிபுரியும் இடத்திலிருந்து வெளியேறுவதற்கு தடை விதித்ததாகவும் இளவரசி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அந்தப் பெண் தன்னுடைய உடைமைகளுடன் யாருக்கும் தெரியாமல் ஒருநாள் அங்கிருந்து வெளியேறி பேருந்தில் பயணித்துள்ளார். ஒரு நிறுத்தத்தில் இறங்கியபோது அருகில் இருந்தவரிடம் விஷயத்தைத் தெரிவித்துள்ளார். அ
வர் உதவியுடன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :