இம்முறை மாகாண சபைத் தேர்தலில் அரச அதிகாரம் மற்றும் அரச சொத்துக்கள் பாவனையை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற சந்திப்பில் இவ்வாறு கோரிக்கை விடுத்ததாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி இம்மாதம் 25ம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் 1ம் திகதிவரை வேட்பு மனு கோரப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒகஸ்ட் மாதம் 1ம் திகதியிலிருந்து 5 அல்லது 8 வாரங்களில் தேர்தல் நடாத்தப்படும் என கூறப்படுகிறது.

0 comments :
Post a Comment