|
டெல்லி மெட்ரோ ரயில்களில் காதல் என்ற பெயரில் ஆண்கள்- பெண்கள் தவறாக நடந்து கொள்ளும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மெட்ரோ ரயிலில் குறிப்பாக இரவு நேரங்களில் ஆட்கள் அதிகமில்லாத பெட்டிகளில் ஏறும் ஆண்- பெண்கள் சிலர் ரயிலில் வைத்தே அறுவறுக்கத்தக்க வேலைகளில் ஈடுபடுகின்றனர். இதை அங்குள்ள வீடியோ கமெராக்கள் படம் பிடிக்கின்றன என்பது பெரும்பாலான நபர்களுக்கு தெரிவதில்லை. இந்நிலையில் ஆண்- பெண் தவறாக நடந்து கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ செல்போன் மூலமாகவும் பரவ தொடங்கியுள்ளது. இதில் முக்கியமான கேள்வி, இந்த வீடியோக்கள் எப்படி வெளியாகின என்பது தான். இந்த கமெராக்கள் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை(CISF) ஆகியோரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. இப்போது வீடியோவை லீக் செய்தது யார் என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தீவிரவாதிகள் தாக்குதல் உள்ளிட்ட செயல்களை தடுக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே இந்த கமெராக்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |
Home
/
LATEST NEWS
/
இந்தியா
/
ரயிலில் நடக்கும் அந்தரங்கம் அங்கு பொருத்தப்பட்டுள்ள விடியோவில்-அவதானம்
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments :
Post a Comment